உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் மோதிச் செல்லும் அதிர்ச்சி தரும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
உத்தர பரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரிய பங்கேற்கும் நிகழ்ச்சி அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை மத்திய உள்துறை இணையமைச்சரான அஜஸ் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல இடங்களிலும் போராட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் கேரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் வருகை தருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, துணை முதலமைச்சர் பயணிக்கவிருந்த திகுனியா வீதியில் விவசாயிகள் கறுப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க தொண்டர்களின் கார் அணி வகுப்பு அவ் வீதி வழியாகப் பயணித்த போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மோதிச் சென்றது.
சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் துடிதுடிக்க உயிரிழந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கார்களை தீயிட்டு எரித்ததுடன், காரில் பயணித்தவர்களையும் தாக்க, வன்முறைச் சம்பவமாக அது பதிவாகியது.இந்த வன்முறையில் 2 விவசாயிகள் உட்பட ஆறுபேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரம் நாடளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி, விவசாயிகள் மீது பா.ஜ.கட்சியின் கார்கள் வேகமாகச் சென்று மோதும் வீடியோ பதிவை தமது ருவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.இவ் வீடியோ, விவசாயிகள் மீது கார்கள் வேண்டுமென்றே மோதிச் செல்வதை எடுத்துக்காட்டுகின்றது.
Leave a comment