பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த, துப்பாக்கி சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவன், குறித்த சிறுமியின் காதலன் எனவும், இந்த குற்றச் செயலை மறைப்பதற்காக, தனது குடும்பத்தினரின் உதவியுடன் சிறுமியின் உடலத்தை சந்தேகநபர் புதைத்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த, சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிறுவன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது, முரண்பாடான கருத்துகள் நிலவுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.