இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கையின் காவலில் உள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம், மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், தமிழக கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான 249 படகுகள் இலங்கை பாதுகாப்புப் படையினரின் காவலில் உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன், இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்குத் தனது அரசு முதன்மை முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கடற்றொழிலாளர்களையும் கடற்றொழில் படகுகளையும் உடனடியாக விடுவிப்பது மற்றும் திருப்பி அனுப்புவது உள்ளிட்ட இந்தப் பிரச்சினைகள் குறித்து, இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வழிமுறைகள், இராஜதந்திர வழிகள் மற்றும் பல்வேறு உத்தியோகப்பூர்வ மற்றும் உயர் மட்ட கலந்துரையாடல்கள் மூலம் தொடர்ந்து விவாதித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2021ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 1,554 ஆகும். இந்த கடற்றொழிலாளர்களில் சுமார் பத்து பேர் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.