சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எவ்) வின் இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் எனத் எதிர்க்கட்சியின் சுயாதீன எம்.பியான சம்பிக்க ரணவக்க...
பாராளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஒரேயொரு சொல்லில் பதிலளிக்குமாறு கேள்வியெழுப்பினார். அதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பல சொற்களை இணைந்து பதிலளித்தார். முன்னதாக கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாஸ, தேர்தலை...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியையும் உதவியையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சட்டப்படி அனுமதி தேவையில்லாத போதிலும் அதனை பெறவுள்ளதாக ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் வியாழக்கிழமை (23) ஜனாதிபதி...
நாடு பலமடைந்து வருகின்றது என்று ஜனாதிபதியும் வெளிநாட்டு நாணய கையிருப்பு பிரச்சினை இல்லை என்று மத்திய வங்கி ஆளுநரும் கூறுகின்றனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, நகைச்சுவைகளை கூற வேண்டாம்...
எங்களிடம் கடன் மறுசீரமைப்புக்கு சரியான திட்டங்கள் இருந்திருந்தால் இவ்வாறு IMF நிபந்தனைகளுக்கு இணங்கியிருக்க வேண்டியதில்லை என்றும் கடன்சுமையை அதிகரிப்பதால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்....
ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 03...
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக...
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற குறித்த குழுவின் கூட்டத்தில், டிலான் பெரேராவின் பெயரைபாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர்கள் சிலர் நேற்று (22) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர்...
இனப் பிரச்சினைக்கான தீர்வும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த கோரிக்கையை உள்ளடக்குமாறு...
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு, குடும்ப ஆட்சி இல்லாத மக்களாணைக்கு மதிப்பளிக்கும் ஓர் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால...
இந்நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையோடு தாம் விளையாடவில்லை எனவும், அவர்களின் வாழ்க்கையை மரண விழிம்புக்குக் கொண்டு செல்ல செயற்படவில்லை எனவும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச்...
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையில், “கடந்த ஜூலை...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் வீழ்ச்சியடைந்த நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த கடன் வசதியை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை மீண்டும் சர்வதேச...
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சபையில் ஆற்றுப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதுதொடர்பிலான விவாதத்தை ஏப்ரல் 3ஆம் வாரத்தில் நடத்துவதற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது என்றார். பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர், நாட்டை கட்டியெழுப்புவதே...
ஊடகங்களுடன் பிரச்சினைகள் இருப்பின் அதனை பாராளுமன்றத்துக்கு உள்ளேயே தீர்த்துக்கொள்வோம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் முறைகேடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ...
தொழிற்சாலை அமைப்பதாக கூறிக் கொண்டு தமிழர்களின் உரிமைகளையும் இருப்பையும் இல்லாதொழிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது என்றும் தமிழர்கள் பாரம்பரியமான இடம் அழிக்கப்பட்டு பறிக்கப்படுகிறது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்....
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தமும் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது....
பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 32 மேலதிக வாக்குகளால்...
We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.