விவாகரத்து வழக்கு தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், விவாகரத்து கோரி, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த விவாகரத்து வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் முன்னிலையாகவில்லை.
அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என இரு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இருவரையும் சமரச மையத்ததுதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதி தள்ளி வைத்தார்.
அத்துடன், இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று இருப்பதால், அவரால் நேரில் முன்னிலையாக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பின், லண்டனில் உள்ள சங்கீதா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கினார்.
தற்போது, தமிழக முதலமைச்சர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் சங்கீதா. இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.