500x300 1724467 paddydd 1
இந்தியாசெய்திகள்

தரமற்ற நெல் கொள்வனவு! – விசாரணைகள் ஆரம்பம்

Share

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், கிண்ணி மங்கலம், கொக்குளம், சாப்டூர், வால்ராஜபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதே பகுதியில் வசிக்கும் ஒரு சில வியாபாரிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களை விவசாயிகள் என்று கூறி தரமற்ற நெல்லை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி விவசாயிகள் புகார் செய்ததால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் உத்தரவின் பெயரில் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கப்பட்ட நெல்லை சோதனை செய்து பார்த்தனர்.

இதில் அவை சமீபத்தில் அறுவடை செய்த நெல் அல்ல. அவை தரமற்றவை என ஆய்வில் தெரியவந்தது. எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக துணை மண்டல மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு
இந்தியா

முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு.

விவாகரத்து வழக்கு தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக...

Jaishankar
இந்தியா

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் சிறைக்கலவரங்கள் – இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவல்.

இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள்...

arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...