closed
செய்திகள்இலங்கை

ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகளுக்கு பூட்டு!

Share

சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு, மின்சாரத் துண்டிப்பு காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 சதவீத ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான நேரத்தில் எரிவாயு , கோதுமை மா ஆகியவற்றுக்காக அலைந்து திரிய வேண்டியுள்ளதாகவும், இரவில் மின்வெட்டு காரணமாக ஹோட்டல், பேக்கரிகள் இயங்க முடியாதுள்ளதாகவும் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்சாரத் துண்டிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் பேக்கரி கடை நடத்த முடியாதுள்ளதாகவும் கடை வாடகை மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றை வழங்க முடியாத சூழ்நிலை உருவாகி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்க்கமான முடிவை காணாவிட்டால் தமது வர்த்தகத்தை நிரந்தரமாக மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...