7 25
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 48 பேருக்கு சிவப்பு பிடியாணை உத்தரவு

Share

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 48 பேருக்கு சிவப்பு பிடியாணை உத்தரவு

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட 48 பேருக்கு சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமை 6 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சர்வதேச சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர்களில் 28 பேர் டுபாயிலும், 11 பேர் இந்தியாவிலும், மற்ற மூவர் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலும் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

கொஸ்கொட சுஜீ, அல்டோ தர்மா, களு சாகர, படோவிட்ட அசங்க, லொகு பட்டி, மிதிகம சுட்டி, கெஹெல்பத்தர பத்மே, உரகஹா மைக்கேல், ஜிலே, ஹந்தயா, சாரியா, கிஹான் பொன்சேகா, ஷான் அரோஷ், சுடு மல், லுனாவே அசிதா, திப்பிட்டிகொட சக்தி, வல்லே சாரங்கா, ரன்மல்லி, திப்பிட்டிகொட லஹிரு, மலுவகே சன், நிபுனா, டிஸ்கோ, குடு லலித், சாம சமித், பினோய் தில்ஷான், சம்பிகா பிரசன்னா, சுது மென்யா மற்றும் லதா போன்றோர் டுபாயில் தலைமறைவாகியுள்ள நிலையில், சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...