crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

Share

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 17 ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கார் ஒன்றில் இருந்தே குறித்த வைத்தியரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகியோரே இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், நுவரெலியா காவல்துறையினரின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன்படி, சந்தேகநபர்களை கடந்த ஜூன்மாதம் 26 ஆம் திகதி நுவரெலியா நீதிமன்ற நீதவான் முன் முன்னிலைப்படுத்திய பின்னர், இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் காதலர் எனும் கூறப்படும் நபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், யாழ்ப்பாணம் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...