arrest scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

சென்னையில் சோதனை – இலங்கையர் கைது

Share

சென்னையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பர்மா பஜாரில் கடை நடத்தி வரும் முகமது இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை சென்னையின் 8 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய சோதனையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், 82 இலட்சம் ரூபாய் பணம், 300 கிராம் தங்கம், 1,000 சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் 10 கிலோ கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன.

என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையில் இவர் கைதாகினார்.

2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ஒன்பது பேரை என்ஐஏ கைது செய்த நிலையில், இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் போதைப்பொருள் வியாபாரி ஹாஜி சலீமுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், 300 கிலோ ஹெராயின், ஏகே 47 ரக துப்பாக்கிகள் ஐந்து மற்றும் ஆயிரம் 9 மில்லி மீற்றர் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற சம்பவத்தில் ஹாஜி சலீமுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது

குறித்த படகை  கேரளாவின் விழிஞ்சம் துறைமுகம் அருகே இந்திய பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...