palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

Share

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது, பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பொதுமக்களின் பாவனைக்காக பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் மாதத்தில் சில நாள்கள் கடும் கட்டுப்பாடுகளுடனும், பின்னர் எந்தத் தடையும் இன்றியும் வழிபாடுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படிருந்தாலும் , இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கான பாதை விடுவிக்கப்படவில்லை.

தனியார் காணிகள் மற்றும் பிறிதொரு ஆலயக் காணி என்பவற்று க்கிடையே அமைக்கப்பட்ட தற்காலிகப் பாதை ஊடாகவே மக்கள் இதுவரை ஆலயத்துக்குச் சென்று வந்தனர்.

மேலும் , ஆலயத்துக்கான பாதையை முழுமையாக விடுவிக்கும்படி மக்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதியுடன் நேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்போது, பாதையை மக்களின் பயன்பாட்டுக்காக விடுவிப்பதற்கு கட்டளைத் தளபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இரவு 10 மணிவரை இந்தப் பாதை விடுவிக்கப்படவுள்ளது.

 

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...