air
இலங்கைசெய்திகள்

யாழ். – கொழும்பு விமான சேவை மீள ஆரம்பம்

Share

நாட்டில் கொரோனாப் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான உள்நாட்டு விமான சேவை எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டு விமான சேவைகளை சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு முன்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்துக்கு வாராந்தம் இரண்டு முறை விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...