செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

Share

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட 102 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தம் 524 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 513 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், நீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 56 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் 48ஆவது நாளான இன்றைய தினம் 09 புதிய எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 எலும்புக்கூடுகள் மேலதிக பரிசோதனைகளுக்காக மீட்கப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வுப் பணியின் போது, சான்றுப் பொருட்களாக மாட்டின் காலில் அடிக்கப்படும் லாடம் ஒன்று மற்றும் கைவளையல் ஒன்று ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
இலங்கை

முன்னாள் அமைச்சரால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை .

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகள் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் விசாரிக்குமாறு...