Sexual Abuse
செய்திகள்இந்தியா

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை-இந்தியாவில் தொடரும் கொடூரம்

Share

இந்தியாவில் ஓடும் புகையிரதத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

லக்னோ பகுதியிலிருந்து இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் கொள்ளையர்களால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ள நிலையில் 8பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோபகுதியிலிருந்து இருந்து மராட்டியத்தின் மும்பை நோக்கி கடந்த 8-ம் தேதி இரவு லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் புகையிரதம் புறப்பட்டது.

மராட்டியத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு புகையிரதம் வந்தபோது அதில் ஆயுதங்களுடன் 8 கொள்ளையர்கள் ஏறினர்.

படுக்கை பெட்டியில் ஏறிய கொள்ளையர்கள் பயணிகளிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

மேலும் கொள்ளையர்கள் 20 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவரை அவரது கணவர் மற்றும் சக பயணிகள் முன் ஒடும் புகையிரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதை தடுக்க முயன்ற பெண்ணின் கணவர் மற்றும் சக பயணிகளை கொள்ளையர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளறார்கள்

புகையிரதம் மும்பையின் கசரா ரெயில் நிலையம் வந்ததும் பயணிகள் கூச்சலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் கொள்ளையர்களில் 4 பேரை கைது செய்தனர்.

மற்றய 4 கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்.

இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்தபொலிஸார் தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் எஞ்சிய 4 கொள்ளையர்களையும் பொலிஸார் கைது செய்தார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் 4 பேர் மேலும் ப குற்றங்களோடு தொடர்புடையவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் அனைவரும் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கெதிரான பல கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...