இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை என்பதால், மாநிலங்கள் கலால் வரி மூலம் அதிக வருமானம் பெறுகின்றன.
மது விற்பனையில் அதிக வருமானம் ஈட்டும் 5 மாநிலங்கள், இந்திய ரிசர்வ் வங்கி , மாநில நிதித் தரவுகளின் அடிப்படையில், பட்டியலிடப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசமானது , ரூ.31,517.40 கோடி வருமானத்துடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தரவுகளின்படி, இம்மாநிலத்தில் 0.3% பெண்களும், 14.6% ஆண்களும் மது அருந்துகின்றனர். அந்த வகையில் இம் மாநிலமானது முதலிடத்திலும் காணப்படுகின்றது.
அடுத்து இரண்டாம் நிலையில் கர்நாடகா உள்ளதோடு அங்கு
ரூ.20,950 கோடி வருமானம் ஈட்டப்படுகின்றது. இம்மாநிலத்தில் 0.9% பெண்களும், 16.5% ஆண்களும் மது அருந்துவதாக தகவல் தெரிவிக்கிறது.
மேலும், மகாராஷ்டிராவில், ரூ.17,477.40 கோடி வருமானத்துடன் மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை, புனே, நாசிக் போன்ற நகரங்களில் அதிக நுகர்வு இருப்பதால் மாநிலத்தின் வருவாய் உயர்ந்துள்ளது. இங்கு 0.4% பெண்களும், 13.9% ஆண்களும் மது அருந்துகின்றனர்.
அத்துடன் மத்தியப் பிரதேசம் ரூ.11,873.70 கோடி வருமானத்துடன் மத்தியப் பிரதேசம் நான்காவது இடத்தில் உள்ளது. அதன்படி, தரவுகளின்படி, 1% பெண்களும், 17% ஆண்களும் மது அருந்துகின்றனர்.
மேலும் தமிழ்நாடு, மது நுகர்வு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. தரவுகளின்படி, மது விநியோகம் மூலம் தமிழ்நாடு சுமார் ரூ. 7,262.30 கோடி வருவாயை ஈட்டுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் 0.3 சதவீதப் பெண்களும் 25.4 சதவீத ஆண்களும் மது அருந்துகின்றனர்.