04
செய்திகள்அரசியல்இலங்கை

இந்திய துணைத் தூதரகத்தால் “ஒற்றுமைக்கான மிதிவண்டி” பயணம்

Share

யாழ். இந்திய துணைத் தூதரகத்தால், சர்தார் வல்லபாய் படேலின் 146 வது பிறந்தநாள், மற்றும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு “ஆசாதிகா அம்ரித்ம ஹோற்சவ்” கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று “ஒற்றுமைக்கான மிதிவண்டி” ஓட்ட நிகழ்வொன்றை நடத்தியது.

இதன்போது யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் , தூதரகத்திலிருந்து மிதிவண்டியில் பயணித்து நாவற்குழி பகுதியில் சிவபூமி அறக்கட்டளையின் கீழ் அமைந்துள்ள சிவபூமி (தட்சணாமூர்த்தி) கோவிலை அடைந்தனர்.

அங்கு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொட்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜை வரவேற்றார்.

தொடர்ந்து “உலகம் ஒரு குடும்பம் எனும் வசுதைவ குடும்பகத்தின்” வழிகாட்டுதலின் பேரில், இந்திய துணைத் தூதுவர் துணைத் தூதரகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து இந்திய மற்றும் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக சிறப்பு வழிபாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

03 01 02

#SriLankaNews #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...