jayantha keddakoda
இலங்கைசெய்திகள்

கப்ரால் வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டகொட!

Share

மத்திய வங்கியின்  ஆளுநராக தற்போதுள்ள பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்னும் சில தினங்களில் தனது பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் அஜித் நிவாட் கப்ரால் தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளார்.

இதையடுத்து வெற்றிடமாகும் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை மீண்டும் நியமிப்பது தொடர்பில் பெரமுன கட்சி அவதானம் செலுத்தி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு வாய்ப்பளித்து தனது நாடாளுமன்ற உறுப்புரிமை பதவியை துறந்த ஜெயந்த கெட்டகொடவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை வழங்க வேண்டும் என மொட்டுக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...