WhatsApp Image 2021 08 27 at 23.03.47 1
செய்திகள்இலங்கை

கொரோனாவிலிருந்து மீண்ட அஜித் ரோகண குடும்பத்துடன் கொடுத்த போஸ்!!

Share

கொரோனாத் தொற்றுக்குள்ளான முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஜித் ரோஹண, பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.  அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதை உணர்ந்து முதல் சந்தர்ப்பத்திலேயே உடனடியாக சிகிச்சை பெறுவது மிக அவசியம் எனவும் அதனை தான் செய்ததன் காரணமாகவே இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் எனது போலி புகைப்படங்களைப் பயன்படுத்தி, தான் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறேன் என சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்தவர்கள் தொடர்பில் மிகவும் வருந்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தருணத்தில் விரைவாக குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஆகவே நோயை குறைத்து மதிப்பிடாமல் அறிகுறி தென்பட்ட உடனேயே சிகிச்சை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...