Avalanche Pakistan Trekking Area
உலகம்

நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் மாயம்.

Share

பாகிஸ்தானில் உள்ள உலகின் 12ஆவது மிக உயர்ந்த மலையான ‘பிராட் பீக்’ பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ் பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 4 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பிரபல நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான “14 Peaks: Nothing Is Impossible” மூலம் உலகப் புகழ்பெற்ற 43 வயதான நிர்மல் புர்ஜா, உலகின் மிக உயரமான 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் ஏறி உலக சாதனை படைத்தவர் ஆவார்.

8,051 மீட்டர் உயரமுள்ள பிராட் பீக் மலையில் சுமார் 6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு காணாமல் போன 10 பேரில் நேபாளம், பாகிஸ்தான், ஓமன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

தற்போது, பாகிஸ்தான் இராணுவத்தின் இரண்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் சிறப்புத் தேடுதல் குழுவினர் கில்கிட் பல்டிஸ்தான் பகுதியில் உள்ள கடினமான நிலப்பரப்பில் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்களில் இருவரின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிர்மல் புர்ஜா உட்பட மாயமான எஞ்சிய 6 வீரர்களை மீட்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Share
தொடர்புடையது
gunshootpolise 1
உலகம்

மிச்சிகன் மாநிலத்தில் துப்பாக்கி சூடு – துப்பாக்கிதாரி உள்ளிட்ட பலர் பலி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை...

தாய்வானில்
உலகம்

தாய்வானில் முடக்கப்பட்ட இணைய சேவை – சீனாவின் அச்சுறுத்தலின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!

தாய்வானில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகத் தலைநகர் தாய்பேயில்...

ஜப்பானில் கொலை
உலகம்

ஜப்பானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில்...

hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...