ஜப்பானில் கொலை
உலகம்

ஜப்பானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

Share

ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் என அந்நாட்டுப் காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன், சந்தேகநபரான 18 வயது இளைஞரை அந்நாட்டுப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
car dubai
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் – இலங்கைக்கு கிடைத்தது யோகம்!

  ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, இலங்கை ஊடாக புதிய சரக்கு...

Meta Company
உலகம்

மெட்டாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று !

இன்றைய தினம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது, சிறார்களின்...

donalt drump
உலகம்

ஓமானை கடுமையாக எச்சரித்த அமெரிக்க அதிபர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமன் தலையிட்டால்,...

antonello da messina
உலகம்

இத்தாலியில் திருடப்பட்ட பலநூறு கோடி ரூபா பெறுமதியான ஓவியங்கள்!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புகழ்பெற்ற...