hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

Share

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில் பயணித்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஏமன் கடலோரப் காவல் படை மற்றும் இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஓமானின் சலாலா துறைமுகத்திலிருந்து ஜிபூட்டி நோக்கி தன்சானியக் கொடியுடன் பயணித்த ‘திஹாமா’ என்ற சிறிய சரக்குக் கப்பலே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

குறித்த, தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், ஹூதி அமைப்பு இதுவரை இதற்கு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.

மேலும், சவூதி அரேபியாவிற்கு எதிராக ஹூதி அமைப்பினர் செங்கடலில் கடற்படை முற்றுகையை அறிவித்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், செங்கடல் வழியிலான சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் மீண்டும் பதற்றமும் பாதுகாப்பற்ற சூழலும் தீவிரமடைந்துள்ளது.

Share
தொடர்புடையது
பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும்...

parlimen president 2
உலகம்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை – ஜனாதிபதியின் தீர்மானம்!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை...

fsgtyriujgb
உலகம்

கொலம்பியாவினை உலுக்கிய நிலநடுக்கம்.

இன்றைய தினம், மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் இதனால் நாட்டின்...

சமூக ஊடகங்களினை
உலகம்

சமூக ஊடகங்களினை கட்டுப்படுத்த அமெரிக்க மக்கள் ஆதரவு!

அமெரிக்க மக்களில் பெரும்பான்மையானவர்கள், சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு...