பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

Share

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு, சிரிய நீதிமன்றமொன்றினால் வழங்கப்பட்டுள்ளதுடன், அசாத் மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஐந்து இலட்சம் பேர் உயிரிழந்த 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலேயே இவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாரா பகுதியில், 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டங்களை அடக்குவதற்கு தலைமை தாங்கிய அசாத்தின் உறவினரான ஆட்டெஃப் நஜீப் என்பவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அசாத்தும் அவரது சகோதரரும் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நஜீப் சிறைச்சாலை உடையில் நீதிமன்றக் கூண்டில் நின்றபோதே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ஜப்பானில் கொலை
உலகம்

ஜப்பானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில்...

hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...

parlimen president 2
உலகம்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை – ஜனாதிபதியின் தீர்மானம்!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை...

fsgtyriujgb
உலகம்

கொலம்பியாவினை உலுக்கிய நிலநடுக்கம்.

இன்றைய தினம், மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் இதனால் நாட்டின்...