Thai Border Cambodians
உலகம்

எல்லை மோதல்களால் நிக்கதிக்குள்ளாகியுள்ள 20,000 மக்கள்.

Share

கம்போடியாவின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஆய்வு செய்யச் சென்ற ஐ.நா சிறப்புப் பிரதிநிதி டாம் அண்ட்ரூஸ், அந்நாட்டின் தலைநகர் புனோம் பென்னில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அதன் போது, தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதல்களால் 20,000க்கும் அதிகமான கம்போடிய மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் இருப்பதாக ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி டாம் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில் எல்லைப் பகுதியில் சுமார் 6,50,000 மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், 20,000க்கும் அதிகமானோர் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத சூழல் நிலவுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், சில நகரங்கள் மற்றும் கிராமங்களை தாய்லாந்து இராணுவத்தினர் இன்னமும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறிய அவர், ஆயுத மோதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது சர்வதேச சட்டப்படி அவர்களின் உரிமை என்றும், தாய்லாந்தும் கம்போடியாவும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், கம்போடிய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கவில்லை என்றும், இருதரப்பு போர்நிறுத்த ஒப்பந்தப்படியே செயல்படுவதாகவும் தாய்லாந்து தெரிவித்து வருகிறது.

இந்த எல்லை மூடல் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் வர்த்தகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கம்போடியாவில் அதிகரித்து வரும் இணைய மோசடி மையங்கள் பெரும் மனித உரிமைச் சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், இதில் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் செல்வாக்குமிக்க நபர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு...

robo
உலகம்

ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை...

சூறாவளி 1
உலகம்

ஜப்பானை நோக்கி வேகமாக நகரும் சூறாவளி – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்.

பசிபிக் பெருங்கடலில் உருவான ‘டொல்பின்’ தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவதுடன், அது...

huteees
உலகம்

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களால் அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை.

சவூதி அரேபியாவை சேர்ந்த ஆறு பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக,...