modi 720x375 1
ஏனையவைஉலகம்

அமெரிக்கா செல்கிறார் மோடி!

Share

அமெரிக்கா செல்கிறார் மோடி!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வொஷிங்டன் செல்லவுள்ளார்.

இந்த மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்கவுள்ளன.

இந்த மாநாட்டில் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளை பாதுகாப்பது, கொவிட் தடுப்பு நடவடிக்கைகள், கொவிட் தடுப்பூசிகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படவுள்ளது.

முக்கியமாக ஆப்கான் விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ளது என வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு எதிர்வரும் 23 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...