china 1
இந்தியாஉலகம்செய்திகள்

சீன பொருட்களை வாங்க இந்தியர்கள் மறுப்பு!

Share

2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளிடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 40 சீன வீரர்களும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அருணாசலபிரதேசம் தவாங் பகுதியில் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தியா- சீனா இடையேயான எல்லை மோதலுக்கு பிறகு சீனாவில் தயாராகும் பொருட்களை இந்தியாவில் வாங்குவது தொடர்பாக லோக்கல் சர்க்கிளில் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 10-ல் 6 இந்தியர்கள் சீன பொருட்களை வாங்குவதை தவிர்த்து வருவதாக தெரியவந்துள்ளது. அதாவது 60 சதவீத இந்தியர்கள் சீன பொருட்களை வாங்க மறுத்துவிட்டனர்.

இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ஆடைகள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்ற சில துறைகளில் சீன பொருட்களை வாங்குவதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு 11 சதவீதம் பேர் சீன பைகள், ஆடைகள், உதிரிப்பாகங்களை வாங்கினார்கள்.

அது தற்போது 3 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சீன வாகன உதிரிப்பாகங்களை வாங்கிய 7 சதவீதம் பேர் கடந்த ஒரு வருடமாக எதையும் வாங்கவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டில் 29 சதவீதமாக இருந்த சீன பொருட்களின் தேவை இந்த ஆண்டு 35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பண்டிகை கால தேவை, எலக்ட்ரானிக் பொருட்கள் எழுது பொருட்கள் போன்றவற்றின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் மேட் இன் சீனா பொருட்களைவிட, மேட் இன் இந்தியா பொருட்கள் சிறந்த விலை, தரத்தை வழங்குவதாக 4-ல் ஒரு இந்தியர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

#India #world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...