varisu
சினிமாபொழுதுபோக்கு

‘வாரிசு’ உரிமையை கைப்பற்றிய உதயநிதி

Share

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ அளித்துள்ள பேட்டியில், ”வாரிசு படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்க கோரி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் சென்னை,செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நார்த் ஆர்காடு, சவுத் ஆர்காடு ஆகிய பகுதிகளில் ‘வாரிசு’ திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிக்கும் ‘துணிவு’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...