world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

Share

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் (SIAA) தனது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயல் ஒரு சாதாரண சட்ட மீறல் அல்ல, மாறாகக் காலங்காலமாக மக்களை மகிழ்விக்கும் கலைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு திட்டமிட்ட வன்முறை எனச் சாடியுள்ளது.

ஒரு திரைப்படம் என்பது சில மணித்துளிகள் ஓடும் கற்பனை கதையல்ல, அது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வை, உழைப்பு மற்றும் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுயலாபம் அல்லது காழ்ப்புணர்ச்சி காரணமாகத் திரைத்துறையைக் களங்கப்படுத்த முயல்பவர்கள், ஒட்டுமொத்தத் துறையின் மாண்புக்கே அறைகூவல் விடுத்துள்ளதாகச் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரியத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும், கலைஞர்களும் ஒன்றிணைந்து இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனத் தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசிப் படம் என்பதால் ‘ஜனநாயகன்’ மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், நடிகர் சங்கத்தின் இந்த அறிக்கை திரையுலகினர் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. சைபர் க்ரைம் போலீசார் ஏற்கனவே இது தொடர்பாக 6 பேரைக் கைது செய்துள்ள நிலையில், பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறியச் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 17
பொழுதுபோக்குசினிமா

பிரபாஸின் ‘பௌஜி’ படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘பௌஜி’...

world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...