suksh
செய்திகள்இலங்கை

வடக்கு கிழக்கு கிளர்ந்தெழும்!! – சுகாஷ் எச்சரிக்கை

Share

நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சித்திரவதைகள் தொடருமாயின், வடக்கு கிழக்கு கிளர்ந்தெழ வேண்டி ஏற்படும்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைக்குள் அடாவடியாக பிரவேசித்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதுடன், அவர்களில் இருவரை முட்டுக்காலில் இருத்திவைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்திய ஆளுங்கட்சி சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழர் தாயகத்திலிருந்து சிங்களக் கட்சிகளுக்கு வால் பிடிப்போர் இனி அம்மணமாகத் திரியுங்கள்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சித்திரவதைகள் தொடர்ந்து கொண்டே செல்லுமாயின் வடக்கும் கிழக்கும் கொரோனாவைத் தாண்டியும் கிளர்ந்தெழும்.

யாருக்கும் தெரியாமல் கொரோனாக் காலத்தில் அரசியல் கைதிகளில் கைவைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – என்றுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...