சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

Share

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனப் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.

கண்டிப் பகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது, குறித்த பதவியை ஏற்கும் சந்தர்ப்பத்திலேயே, மிகக் குறுகிய காலத்திற்குள் தான் இதிலிருந்து விலகப் போவதாக ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ‘டித்வா’ சூறாவளி நிலைமை காரணமாக மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, தனது முடிவை பிற்போட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகப் பேராசிரியர் சரத் அபேகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...

வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...