iStock 481738412
செய்திகள்அரசியல்இலங்கை

மின்தடையால் மின்தூக்கியில் சிக்கிய எம்.பிக்கள்!!!

Share

நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர்கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் 20 நிமிடங்கள் வரை மின்தூக்கியில் சிக்கிக்கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஆகியோரே மின்தூக்கியில் சிக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் மின் துண்டிக்கப்பட்ட போது நாடாளுமன்ற வளாகத்துக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டதுடன், இதன்போது மின்தூக்கியின் செயற்பாடும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலிடம் வினவிய போது, ​​தானும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல ஆகியோரும் சுமார் 20 நிமிடம் மின்தூக்கியில் சிக்கியிருந்தோம்.

இதனால் தாம் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் உயிருக்கு பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...