vv 1
இலங்கைசெய்திகள்

223 ஆமைகளுடன் மூவர் கைது

Share

நீர்கொழும்பு பகுதியில் நான்கு மாடிகளைக் கொண்ட வீடொன்றில் வளர்ப்பதற்கு தடைசெய்யப்பட்ட உயிரினமான 223 நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப் பத்திரம் இன்றி நட்சத்திர ஆமைகளை வைத்திருப்பதற்கோ அல்லது வாகனங்களில் ஏற்றி செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 223 நட்சத்திர ஆமைகளை ரெஜிபோம் பெட்டிகளில் அடைத்து வாகனங்களில் கொண்டு செல்ல தயார் செய்யப்பட்ட நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் இந்தியப் பிரஜைகள் எனவும் ஒருவர் முல்லேரியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகளை மேற்கொண்டு நீர்கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...