கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முதலில் ஒரே வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதன் பின்னர் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த நபர் இந்த மோதலில் தலையிட்டுள்ளார்.
தலையிட்ட நபர் தடியால் தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தம்புள்ள காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரைக் கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய தடியைத் தனது வீட்டின் கூரை மீது வீசியிருந்தது கண்டறியப்பட்டது. காவல்துறையினரால் அந்தத் தடி மீட்கப்பட்டது.
அத்துடன், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவியும் காயமடைந்து, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதலில் உயிரிழந்தவர் குறித்த பகுதியில் வசித்து வந்த, ஒரு பிள்ளையின் தந்தையான 57 வயதுடைய சுனில் ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.