highway
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானமும் பாதிப்பு!

Share

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியால் அதிவேக நெடுஞ்சாலைகளின் நாளாந்த வருமானம் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரச்சபையின் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நாளாந்தம் 30 மில்லியன் ரூபாவரை வருமானம் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், தற்போது அது 8 மில்லியன் ரூபாவரை குறைவடைந்துள்ளது.

இலங்கையில் இரு மாதங்களுக்கு மேலாக எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கின்றது. எரிபொருளை பெறுவதற்கு பல நாட்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது.

இதனால் பெருமளவான பயணிகள் தூர இடங்களுக்கு சொந்த வாகனங்களில் பயணிப்பதை கைவிட்டுள்ளனர், பொது போக்குவரத்தையே அவர்கள் தெரிவுசெய்கின்றனர்.

மறுபுறத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்ப நிலையால் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடும் அமுலில் இருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் சடுதியாக குறைவடைந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...