Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

Share

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அங்குணுகொலபெலஸ்ஸ, பூஸ்ஸ, போகம்பரை, களுத்துறை, அநுராதபுரம், கொழும்பு மகசின், மொணராகலை, வட்டரக்க மற்றும் வாரியபொல ஆகிய சிறைச்சாலைகளில் இருந்த தோட்டாக்களே இவ்வாறு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகத் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள 191 துப்பாக்கிகள் பழுதுபார்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 27 சிறைச்சாலைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி பாதுகாப்புக் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் 1038 பயன்படுத்த முடியாததோடு, அந்நிறுவனங்களில் அவற்றிற்கு கடும் பற்றாக்குறையும் நிலவுகின்றது.

இவற்றில் 62 துப்பாக்கிகள், 50 மேகசின்கள்  மற்றும் 1278 தோட்டாக்கள் விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் ஒப்படைக்கப்பட்டு 3 ஆண்டுகள் முதல் 31 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவை இதுவரை முறையாக பெற்றுக் கொள்ளப்படவில்லை.

ஆகையினால், கலவர சூழ்நிலையின் போது அதிகாரிகளுக்கு அதை எதிர்கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் நீதிமன்றக் கடமைகள், விசேட மருத்துவமனைக் கடமைகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளின் போதும் ஆயுதப் பற்றாக்குறை ஒரு தடையாக இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகின்றது.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

வெப்பமான வானிலையானது மேலும் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த...

hr d
இலங்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ள அதிகாரிகள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் சார்ந்த பகுதிகளில் பதிவான பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...