veppam
இலங்கை

வெப்பமான வானிலையானது மேலும் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்.

Share

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் இதே போன்று நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னரே மழை நிலைமை படிப்படியாகக் குறையும் என அத்திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் ஸ்ரீமால் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டைப் பாதித்துள்ள எல் நினோ நிலைமையானது அடுத்த வருடத்தின் வடகிழக்கு பருவக்காற்று காலம் வரை நீடிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தற்பொழுது வறட்சியான வானிலை நிலவும் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தொடர்ச்சியாக வறட்சியான நிலைமை காணப்படுவதால் எதிர்காலத்தில் காற்றின் வேகம் குறையக்கூடும் என்றும், இதனால் ஈரப்பதனுடன் இணைந்து உடலால் உணரும் வெப்பநிலை மீண்டும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...