மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 5,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
குறித்த தொகையானது, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியைக் காட்டுகின்றது.
கடந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த அடிப்படையில், கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 947.2 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
மேலும், ஜூலை மாதத்தில் மட்டும் நாட்டிற்குப் பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது கடந்த ஜூன் மாதம் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்துடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஜூன் மாதத்தில் நாட்டிற்குப் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
இதன்படி, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 80.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வளர்ச்சியைக் காட்டி, ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் டொலர்கள் பதிவாகியுள்ளன.