இன்றைய தினம் மாலை 7.00 மணிக்கு, கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த வான்கதவுகள் ஊடாக வினாடிக்கு சுமார் 20 கனமீற்றர் வேகத்தில் மேலதிக நீர் கொத்மலை ஓயாவிற்கு திறந்துவிடப்படுவதாக இலங்கை மகாவலி அதிகாரசபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் செயல்பாட்டுப் பிரிவு (கொத்மலை) குறிப்பிட்டுள்ளது.
இதனால், நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியிலுள்ள கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் மிகச்சிறிய அளவில் உயரக்கூடும் என்பதால், இதுகுறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது குறித்து உடனடியாக விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.