சேனக்க பல்லேதென்ன
இலங்கை

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர்!

Share

சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் சேனக்க பல்லேதென்ன, மஹர சிறைச்சாலை அத்தியாட்சகராகவும், பயிற்சிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதுடன், காலி ரிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவராகவும் , கொழும்பு பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் பற்றிய கல்வியில் டிப்ளோமா படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.

அத்துடன், இந்தியாவின் கேரளாவில் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த முகாமை தொடர்பான டிப்ளோமா படிப்பையும் கற்றுள்ள இவர், போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலைத்தீவு, துருக்கி ஆகிய நாடுகளில் பல டிப்ளோமா படிப்புகளையும் பயின்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...