Harsha de Silva
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத முத்திரை! – ஜெனிவாவில் எதிரொலிக்கும்

Share

” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது அதே சட்டத்தை கையில் எடுத்துள்ளார். போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் எதிரொலிக்கும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இடைக்கால வரவு – செலவு திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” காகத்தின் கூட்டில்தான் குயில் முட்டையிடும். சிறிதாக இருக்கும்போது, குயிலும் காகம்போல இருக்கும். வளர, வளரதான் பிரச்சினை ஆரம்பமாகும். குயில் விரட்டியடிக்கப்படும். மொட்டு கட்சி ஆட்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள பாதீடும், காகத்தின் கூட்டியில் குயில் முட்டை கதைபோல்தான். பாரிய ஆபத்து காத்திருக்கின்றது.

தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே மொட்டு கட்சி ஜனாதிபதியை பயன்படுத்துகின்றது. அவரின் சில திட்டங்களுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் தருணம்வரும்போது வேலையைக் காட்டுவார்கள்.

நாட்டு பொருளாதாரத்தை ராஜபக்சக்கள் சீரழித்துவிட்டனர். ஒருவரிடம் ஒரு லட்சம் சேமிப்பு இருந்தால் அதன் தற்போதைய பெறுமதி 30 ஆயிரம் ரூபாதான். ” – என்றார் ஹர்ஷ டி சில்வா.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...