AIR 2 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவருக்கு விசேட நடைமுறை!

Share

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான விமான நிலையங்களில் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கென விசேட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் நாட்டுக்குள் நுழைய முன்னர் புறப்படும் இடத்தில் பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனில் விமான நிலையத்தில் மற்றொரு பி.சி.ஆர் சோதனை தேவையில்லை எனவும் பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறையாகும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் இலங்கையை வந்தடைந்த பின் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புறப்படும் நாட்டில் 72 மணிநேரத்துக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தொற்றில்லாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின்றி நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...