essential items 7989 scaled
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது!

Share

எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலை மேலும் குறைவடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சின் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சீனி, பருப்பு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை எதிர்வரும் சில மாதங்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இன்றி சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்று இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலையினை குறைக்கும் நோக்கில் கோதுமை மாவின் விலையினைக் கட்டுப்படுத்த எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை பகிரங்க கடன் முறைமையின் பிரகாரம் கோதுமை மா இறக்குமதி செய்யப்படும்.

இதேவேளை, இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கும் உழுந்து, குரக்கன், மஞ்சள் போன்ற உணவுப் பொருட்களை முறையற்ற வகையில் சிலர் இறக்குமதி செய்யும் விடயத்தை வர்த்தகர்கள் இதன்போது அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...