ஜீவன் தொண்டமான்
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சு பதவிக்கான அழைப்பை அடியோடு நிராகரித்தார் ஜீவன்!

Share

நாமல் ராஜபக்ச வகித்த இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை ஏற்குமாறு அரச தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நிராகரித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

எதிர்வரும் 18ஆம் திகதி புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரசு, அதற்கான பெயர்ப்பட்டியலைத் தற்போது தயாரித்து வருகின்றது.

இந்நிலையில், புதிய அமைச்சரவையில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு ஜீவன் தொண்டமானுக்கு அரச தரப்பில் இருந்து தூதனுப்பட்டுள்ளது. அந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார்.

“மக்கள் பக்கம் நின்றே சுயாதீனமாகச் செயற்படும் முடிவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எடுத்தது. அந்த முடிவில் மாற்றம் இல்லை. இ.தொ.காவின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்தும் சுயாதீனமாகவே செயற்படுவோம்” என்று ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...