சந்திரிகா 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

களமிறங்கினார் சந்திரிகா! – எதிரணித் தலைவர்களுடன் முக்கிய பேச்சு

Share

நாட்டில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றிருந்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் குழுவை அங்கத்துப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடலின்போது நாட்டின் தற்போதைய இன்னல்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

எவ்வாறாயினும், இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...