276996331 4921993074516195 5155549462485385903 n
அரசியல்இலங்கைசெய்திகள்

21 ஆவது திருத்தத்தை உடன் அமுல்படுத்துங்கள்! – இலங்கை நிருவாக சேவை சங்கம் அரசுக்கு ஆலோசனை

Share

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அப்பால் 19+ உள்ளடக்கப்பட்டு 21 ஆவது திருத்தத்தை விரைவாக கொண்டுவருவது அவசியம் என இலங்கை நிருவாக சேவை சங்கம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு சபையை மீண்டும் புத்துயிர்க்கச் செய்வது, ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறும் நபராக விளங்கவேண்டியது, சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பளிக்கும் ஜனாதிபதியிடமுள்ள அதிகாரத்தை இல்லாமல் செய்வது, ஜனாதிபதியின் ஆளணி எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது மற்றும் அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதை முறைப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியதாக அந்தத் திருத்தம் அமையவேண்டுமென மேற்படி சங்கம் கேட்டுக்கொண்டுள்ளதுடன் அதுதொடர்பான யோசனைகளையும் அந்த சங்கம் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் முன்வைத்துள்ளது.

இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் தலைவர் ரோஹண டி சில்வா உள்ளிட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இந்த ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...