vimal 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு IMF மருந்தாகாது!

Share

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்ற நோய்க்கு சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் மருந்து தீர்வாக அமையாது. மாறாக அது நோயை தீவிரப்படுத்தும். அதன்மூலம் சமூக நெருக்கடி உச்சம் பெறும்.”

இவ்வாறு ‘உத்தர லங்கா சபாகய’ என்ற கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

” சர்வதேச நாணய நிதியமானது, அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையின் ஓர் அங்கமாகும். எனவே, ‘பொருளாதார நெருக்கடி’ என்ற பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் தீர்வு கிட்டாது, நோயை குணப்படுத்துவதற்கு அல்ல, மாறாக நோயை தக்க வைத்துக்கொள்ளவே அங்கிருந்து மருந்து வழங்கப்படும். எனவே, சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் மீண்டெழலாம் என நினைப்பது தவறு. அதன்மூலம் சமூக நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

ஐ.எம்.எவ்பை நாடுவதால் பொருளாதார நெருக்கடி தீர்ந்து, சமூக பாதுகாப்பு ஏற்படாது. அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். அதனால்தான் 2 ஆம் கட்ட போராட்டம் ஆரம்பமாகும் என அநுரகுமார திஸாநாயக்க போன்றவர்கள் அறிவித்து வருகின்றனர்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...