Gun Shot
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காலி துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

Share

காலி, பிடிகல – தல்கஸ்வல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 வயது நபரொருவர் பலியாகியுள்ளார்.

இவர் நேற்று நகருக்குச் சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பதுங்கியிருந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவவத்தில் பலத்த காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விசாரணையில் உயிரிழந்தவர் கடன் கொடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பணத் தகராறு காரணமாக இந்நபர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத அதேவேளை, விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...