202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இந்தியாஇலங்கைசெய்திகள்

இன்றும் தமிழக மீனவர்கள் ஐவர் கைது!

Share

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஐந்து மீனவர்களும் விசைப்படகொன்றில் கோடியாக்கரை பகுதியில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்டவர்கள் எல்லை தாண்டி யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினரால் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை பருத்தித்துறை நீதவான் எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இரு தினங்களில் எல்லை தாண்டிய குற்றத்தின் கீழ் 17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...