election
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்!!

Share

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை பதவி விலகுமாறு மிரட்டி மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு  நேற்று இரவு தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மற்றோர் உறுப்பினர் எஸ்.பி.திவரத்னவுக்கு நேற்று மீண்டும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவில் இருந்து இராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்யப் போவதாக உறுப்பினர்களான கே.பி.பி. பத்திரண மற்றும் எஸ்.பி.திவரத்னவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததை அடுத்து, அந்த இரு உறுப்பினர்களின் வீடுகளுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எம்.எம்.மொஹமட்டுக்கு மிரட்டல் அழைப்பு வந்த நேரத்தில் எஸ்.பி. திவரத்னவுக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் குறுஞ்செய்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...