திஸ்ஸ அத்தநாயக்க
இலங்கைஅரசியல்செய்திகள்

மக்கள் ஆணை கிடைத்தால் சிறந்த ஆட்சி! – எதிரணி உறுதி

Share

“நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியைப் பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம்.”

-இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசிய வேலைத்திட்டமொன்று உள்ளது. அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களை பாதுகாக்கும் திட்டங்கள் எம்மிடம் உள்ளன.

தற்போது பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கான திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல தரப்புகளிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களை நீக்கியமை அரசின் முடிவாகும். மஹிந்த சிந்தனை உட்பட அரசின் திட்டங்களின் பின்னணியில் இவர்களே இருந்தனர்.

எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அவர்களும் பொறுப்புக்கூறவேண்டும். அவர்கள் அரசுக்குள் தொடர்ந்தும் இருந்து முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளவே முற்படுகின்றனர்.

அமைச்சரவையை மாற்றுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. இந்த அரசில் உள்ளவர்கள் பலவீனமானவர்கள் என்பதாலேயே அடிக்கடி மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

அதேவேளை, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களின் செயற்பாடு எமக்குத் தெரியும். அவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்தினர். அப்படியானவர்களை இணைத்துக்கொள்வது பற்றி சந்திக்க வேண்டிவரும்.

அரசில் இருந்து வெளியேறுபவர்களை எல்லாம் இணைத்துக்கொள்ளும் அளவுக்கு எமது கட்சி பலவீனம் அடையவில்லை” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...