sajith 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்னால் திரண்ட சஜித்தின் மகளிர் படை!

Share

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் மிரிஹானவிலும் ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி இவர்கள் மிரிஹானவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மிரிஹான சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கிச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள ஹர்ஷ டி சில்வா, “ஹிருணிகா தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் துணிச்சலான சில பெண்கள் ஜனாதிபதியின் இல்லத்துக்கு வெளியே காணப்படுகின்றனர்.

அவருக்கான மனுவைக் கையளித்த பின்னர் அவர்கள் தமது ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளனர். மக்கள் நெருக்கடியில் சிக்கித் துயருகின்றனர் என்பது ஜனாதிபதிக்குத் தெரியுமோ தெரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...

வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...